ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமிக்க ரணில் இணக்கம்; மூன்று நிபந்தனைகள் விதிப்பு

condition
condition

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை களமிறக்க ரணில் கொள்கையளவில் இணங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சில நிபந்தனைகளை முன்வைத்து அதற்கு சஜித் இணங்கும் பட்சத்திலேயே தமது முழுமையான ஆதரவை ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பார் என்ற தகவலும் அறியக்கிடைத்துள்ளது. இதன்படி

  • சஜித்தை கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதெனில் மத்தியகுழு சம்மதிக்க வேண்டும்.
  • நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க சஜித் ஒப்புக் கொள்ள வேண்டும்.
  • ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் சஜித்தின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

போன்ற 03 நிபந்தனைகளே முன்வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.