பாவனைக்குதவாத பெரிய வெங்காயம் கைப்பற்றப்பட்டுள்ளது

onion 2
onion 2

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாவனைக்குதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் தரித்துநின்ற கொள்கலனிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு என்பன அனுமதியின்றி விற்பனை செய்யப்படுகின்றமைத் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த பெரிய வெங்காயம், துறைமுகத்தில் எவ்வித சோதனைகளுமின்றி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பண்டிகைக் காலத்தில் மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

பிரதான வீதிகளில் இவ்வாறான விற்பனை நடவடிக்கைகளை தடைசெய்துள்ளதாகவும் இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறும் என தம்புள்ளை மாநகர சபையின் மேயர் ஜாலிய ஓபாத தெரிவித்துள்ளார்.