சுகாதார வழிமுறைகளை மீறிய பேருந்துகளின் வீதி அனுமதி பத்திரங்கள் ரத்து!

CTD BUS
CTD BUS

கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை மீறி ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற 68 பேருந்துகளின் வீதி அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்குள் பயணிக்கும் 18 பேருந்துகளின் வீதி அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளுடன் மாகாணங்களுக்கு இடையில் பயணித்த 50 பேருந்துகளின் அனுமதி பத்திரங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.