ஐ.நா தீர்மானத்தினை ராஜபக்‌ஷ அரசு ஒருபோதும் ஏற்காது

Nimal Siipala
Nimal Siipala

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ராஜபக்‌ஷ அரசு ஒருபோதும் ஏற்காது என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு சர்வதேசத்துக்கு அடிபணிந்து செயற்பட்டது. இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ரணில் அரசு இணை அனுசரணைகூட வழங்கியிருந்தது.

ஆயினும் ராஜபக்‌ஷ அரசு வெளிநாடுகளுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ ஒருபோதும் அடிபணியாது. நாட்டுக்கு எதிரான எந்தத் தீர்மானங்களையும் ஏற்காது. அந்தத் தீர்மானம் குப்பையில் தூக்கி வீசப்படும்.

ராஜபக்‌ஷ அரசின் இந்த நிலைப்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் எம்மால் தெரிவிக்கப்படும் எனவும் நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை நடைமுறையில் கொண்டு வருவதற்கு சிங்கள மக்களுடன் தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து பயணிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.