வட மத்திய மாகாணத்தில் 539 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

teaching appoinment 1
teaching appoinment 1

வட மத்திய மாகாணத்தில் 539 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கல்வியின் தரமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, ஆசிரியர்கள் எப்போதும் தங்கள் அறிவைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

இன்று கெகிராவா மத்திய கல்லூரியில் நடைபெற்ற வட மத்திய மாகாணத்தில் 539 ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்களை ஒப்படைக்கும் விழாவில் ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார். மேலும் நவீன அறிவுடன் அதிகாரம் பெற்ற எதிர்கால தலைமுறையை வளர்ப்பதில் ஆசிரியர்கள் இன்று மகத்தான பொறுப்பைக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் எப்போதும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து செயல்படுவதோடு, நமது மதிப்புகள் மற்றும் மரபுகளை மதிக்க அவர்களுக்குக் கற்பிப்பதும் அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழி மூலம் 428 ஆசிரியர்கள், தமிழ் மொழி மூலம் 100 ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில மொழி மூலம் 11 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் எக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் துமிந்தா திசாநாயக்க, வீரக்குமார திஸ்நாயக்க, சந்திமகமகே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.