ஆசிய கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இலங்கை அணி

u19 1
u19 1

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் அரையிறுதிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடனான போட்டியில் 52 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. கட்டுநாயக்கவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 8 விக்கட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 274 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டு 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.


ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் டி குழுவில் இடம்பெற்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது.