வெள்ள நீர் வடிந்தோடல் – கிழக்கு மாகாண ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு

anuratha jagampath
anuratha jagampath

இயற்கை வழி நீர் வடிந்தோடுவதைத் தடுக்கக் கூடிய அனுமதியற்ற கட்டிடங்கள், மதில்கள் என்பனவற்றைத் தகர்க்க வழிவகை செய்யப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் மக்களுடனனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதியினால் நான் ஜனாதிபதியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இங்கு மக்கள் பணிக்காக வந்துள்ளேன்.

மக்கள் சார்பான பல பிரச்சினைகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

காலாகாலமாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் வடிந்தோட முடியாமல் இயற்கை வழி நீரோட்டத்தைத் தடைப்படுத்தி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள், மதில்கள் என்பனவற்றை அகற்ற அதிகார மட்டத்தில் நாம் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.

அத்துடன் தனக்கு தமிழ் தெரியாததையிட்டு வருத்தமடைவதாகவும் தெரிவித்த அவர் அதனை கற்றுக்கொள்ள முயல்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஆளுநர் நிதியின் கீழ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.