இரு பிள்ளைகளின் தந்தை பேருந்து மோதி மரணம்

suicide man Kill Death Dead Body
suicide man Kill Death Dead Body

கினிகத்தேனை அனுரத்த பிரத்தமிக்க வித்தியாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாவலப்பிட்டி, பெனிசுதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய சரத்குமார பியதாஸ என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை பகுதிக்குச் சென்ற நாவலப்பிட்டி டிப்போவுக்கச் சொந்தமான திருத்தப்பணி சேவை பஸ், குறித்த நபர் மீது மோதியுள்ளது.

படுகாயமடைந்த குடும்பஸ்தர் நாலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.