நேற்றைய தினம் 45,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

vaccine reuters1
vaccine reuters1

நாட்டில் நேற்றைய தினம் 45,007 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 11,617 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 27,680 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

856 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும் 3,239 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அத்துடன் நேற்றைய தினம் 190 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

1,128 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 118 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.