பிரபாகரனின் சிந்தனைதான் தமிழில் தேசிய கீதம்- எஸ்.பி குற்றச்சாட்டு

sp 1
sp 1

தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனக் கூறும் போது பிரபாகரனின் பெயரைச் சொன்னவுடன் கைத்தட்டுவதும், கூச்சலிடுவதும் இதன் விளைவுகளினால் தான் என இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“27 மொழிகளுக்கு மேல் நடைமுறையிலுள்ள இந்தியாவில் பெங்காலி மொழியில் தேசிய கீதத்தை பாட முடியுமாக இருந்தால், ஏன் இங்கு மட்டும் ஒரு மொழியில் தேசிய கீதத்தை பாட முடியாது?

ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் மட்டும் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனக் கூறுவது முற்றுமுழுதாக பிரிவினையைத் தூண்டும் செயற்பாடு.

வடக்கில் பிள்ளைகளின் மனங்களில் எல்லாம் பிரபாகரன் இருந்து வருகிறார். அவரது பெயரைச் சொன்னவுடன் கைத்தட்டுவதும், கூச்சலிடுவதும் இதன் விளைவுகளினால் தான்.

நாம் தான் இந்த இளைஞர்களின் மனங்களில் நல்லதை விதைக்க வேண்டும். 27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது.

இது முற்றுமுழுதாக இனவாதத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். தேவையில்லாமல் இனங்களை பிரிக்க வேண்டாம் என் நாம் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.