2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிருவாக சேவை மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

strike 1
strike 1

ஒரு வாரத்திற்குள் அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்கத் தவறினால் காலவரையரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று இலங்கை நிருவாக சேவை சங்கம் எச்சரிக்கிறது.

இலங்கை நிருவாக சேவை சங்க செயலாளர் ரோஹனா டி சில்வா, நேற்று 10ம் திகதி தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் பேசுகையில், தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு அதிகாரியும் தலையிடாமை வருந்தத்தக்கது. குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் துறை, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களிலும் தற்காலிகமாக வேலைநிறுத்த நடவடிக்கை இடம்பெறும் அதன்படி நிர்வாக அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை தடையின்றி தொடருவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், அரசு பல்கலைக்கழகங்களில் கல்விசாரா ஊழியர்களால் நேற்று (10) தொடங்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கையும் இரண்டாம் நாளில் நுழைந்துள்ளது.

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் ஊடகச் செயலாளர் கே.எல்.டி.ஜே ரிச்மண்ட் எந்தவொரு பொறுப்பான அதிகாரியும் தங்களின் கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் முன்வைப்பதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை என தெரிவித்திருந்தார்.