பெண்களுக்கான வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு

DSC 1189
DSC 1189

தனி ஒருவர் குடும்ப தலைமைத்துவத்தை கொண்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான இன்று திங்கட்கிழமை(30) காலை பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில், பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது கணவனை இழந்த, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 130 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் தெரிவு செய்யப்பட்ட 14 விசேட தேவையுடையவர்களுக்கு சுய தொழில் முயற்சிக்கான நிதி உதவிகள் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டது.

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 35 பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிராம அலுவலகர், திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.