உலகின் வயதான பெண் காண்டா மிருகம் உயிரிழப்பு!

0000 1
0000 1

உலகின் வயதான தன்சானிய நாட்டு பெண் காண்டா மிருகம் ‘பாஸ்டா’ உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

57 வயதுடைய இந்த காண்டா மிருகம் கடந்த 27ம் திகதி வயது முதிர்ந்த காரணத்தினாலும், உடல்நலக் குறைவினாலும் உயிரிழந்தது.

இந்த காண்டாமிருகம் தன் வாழ்நாளில் ஒரு குட்டியைக் கூட ஈன்றது இல்லை என்றும் அதுவே அதன் நீண்ட ஆயுளுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக காண்டாமிருகங்கள் 37 வயது முதல் 43 வயது வரை வாழ முடியும். அதே நேரத்தில் ஒரு இடத்தில் வைத்து நன்றாக பராமரித்து வந்தால் 50 ஆண்டு காலம்கூட வசிக்கும் என தெரிவிக்கின்றனர்.