மயிலிட்டி மீள்குடியேற்ற அமைப்பு பிரதிநிதிதிகளுடன் சுமந்திரன் சந்திப்பு!

FB IMG 1636096626487
FB IMG 1636096626487

வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் மீள்குடியேற்ற அமைப்பு பிரதிநிதிதிகளுடன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய நிலப்பரப்புக்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் ஆராய்ந்தார்.

இதன்போது வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் குணபாலசிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள், “சர்வதேச அழுத்தம் மற்றும் கூட்டமைப்பின் முயற்சியால் மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்பட்டது. ஆனாலும், அதன் முழுமையான பயனை எமது மக்கள் அனுபவிக்க முடியவில்லை. இதேநேரம், துறைமுகத்தை நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்விடம் உள்ள 216 ஏக்கர் நிலமும் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடியில் இருப்பதால் மீனவர் சமூகம் மிகவும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்” என்று சுட்டிக்காட்டினர்.