நாட்டில் 22,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள்

95375515 95270464 c0093043 feeding mosquito
95375515 95270464 c0093043 feeding mosquito

சீரற்ற வானிலையால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 59 அதிக அபாயமிக்க வைத்திய அதிகாரி பிரிவுகளை இலக்காகக் கொண்டு இன்று (8) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதிவரை நாட்டில் 22,902 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்