நுவரெலியா – ப்ளக்பூல் சந்தியில் பாரிய மண்சரிவு

601278e8 5ad3 41b9 bb9c e17f61a68ae2
601278e8 5ad3 41b9 bb9c e17f61a68ae2

நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை நிலவர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

ஊவா, வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

இதேவேளை நுவரெலியா – ப்ளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் குறித்த பகுதி ஒரு வழிபாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மண்ணை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நானு-ஓயா காவல்துறையினர் குறிப்பிட்டனர்.