வெளிநாடு செல்வோரையும் திரும்பி வருவோரையும் கண்காணிக்க முடியும்; அபேவர்த்தன

abya
abya

இலங்கை ஜனாதிபதி   கோட்டாபய ராஜபக்ஷவினால்  உருவாக்கப்படவுள்ள, தேசிய தரவு மையத்தின் ஊடாக  வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர், திரும்பி வருவோரைக் கண்காணிக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேசிய தரவு மையம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். லக்ஷ்மன் யாப்பா மேலும் கூறியுள்ளதாவது, வெளிநாடு செல்பவர்களின் இரண்டாவது பயண இலக்கை இந்த அமைப்பு மூலம் கண்காணிக்க முடியும்.

அத்துடன் நாட்டின் சட்டத்திட்டங்களை மீறி தப்பி ஓடுபவர்களை கண்காணிக்கவும் இது உறுதுணையாக அமையும்.எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் எந்தவொரு குடிமகனின் இறப்பும் மூன்று மாதங்களுக்குள் இந்த தரவு மையத்தில் பதியப்பட வேண்டும்.

மேலும் தேவை ஏற்படின்  இவ்விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் தரவு பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்படும்.

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் ஏனைய அனைத்து தனிப்பட்ட தரவுகளும், தேசிய தரவு மையத்தின் கீழ் கொண்டு வரப்படும்” என குறிப்பிட்டார்.