விமானத்தின் இன்ஜின் செயலிழந்த நிலையில் அனைவரையும் காப்பாற்றிய விமானி

4adfd8370fcfda7ab752a20618c2d427 L
4adfd8370fcfda7ab752a20618c2d427 L

தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டீனாவில் நடுவானில் விமானத்தின் இன்ஜின் செயலிழந்த நிலையில், விமானி சாதூர்யமாக சோளக்காட்டில் தரையிறக்கி பயணிகள் அனைவரையும் காப்பாற்றிய சம்பவம் வியக்க வைத்துள்ளது.

வணிக ஜெட் சான் பெர்னாண்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒட்டமெண்டியில் உள்ள ‘லா வெனான்சியா’ என்ற தனியார் விமானப் பாதையில் தரையிறங்க திட்டமிட்டதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான வானிலை நிலைமைகளில் இன்ஜின் செயலிழந்ததால் ஹீரோ விமானி, பெரிய விபத்தை சாதூர்யமாக தவிர்த்து சோளக்காட்டில் தரையிறங்கி விமானத்தில் இருந்த ஒன்பது பேரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.

செஸ்னா சி -560 வணிக ஜெட் விமானத்தின் விமானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். பாதகமான காலநிலையில் பறக்கும் போது விமானம் என்ஜின் செயலிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தப்பிய அனைவரும் விமானத்திலிருந்து காயமின்றி வெளியேறியதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.