கோப் குழுவினால் இன்று இலங்கை முதலீட்டு சபைக்கு அழைப்பு

331637bb 8cb20fe0 cope 850x460 acf cropped
331637bb 8cb20fe0 cope 850x460 acf cropped

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இன்று (11) இலங்கை முதலீட்டு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தினை நிறுவதற்கான மதிப்பீடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, தேசிய இளைஞர் சேவை சபையுடன் இளைஞர் சேவை தனியார் நிறுவனமும் எதிர்வரும் 16 ஆம் திகதி கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.