அரசாங்கம் இப்போது நாட்டிற்கான சாபமாக மாறி உள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி

rohini
rohini

சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது நாட்டிற்கான பெரும் சாபமாக மாறியிருக்கின்றது. குறிப்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய தீர்மானங்கள் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது மெதமுலானவில் உள்ள வீட்டின் உணவுமேசையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றவா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரம் மிகப்பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பது மாத்திரமன்றி பொருட்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது.

மறுபுறம் அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளம்பெரு0கின்ற காரணமாக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அவர்கள் மத்தியில் உயிரச்சமும் ஏற்பட்டிருக்கின்றது என்றார்.