அரசாங்கம் தேர்தலுக்கு முகங்கொடுத்தால் தோல்வியைச் சந்திக்கும் – உதயகுமார்

Capture
Capture

இந்த அரசாங்கம் எதிர்வருங்காலங்களில் தேர்தலொன்றுக்கு முகங்கொடுத்தால், கடந்த 2015 ஆம் ஆண்டில் எதிர்கொண்டதைவிடவும் மிகமோசமான தோல்வியைச் சந்திக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையை எந்தவகையிலும் வாழத்தகுதியற்ற நாடாக தற்போதைய அரசாங்கம் மாற்றியமைத்திருக்கின்றது. 

எனவே எதிர்வரும் புதுவருடத்தில் இந்த அரசாங்கத்தை பதவிகவிழ்ப்பதற்கான செயற்திட்டத்தை நாமனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பது மிகவும் அவசியமாகும். 

‘அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்க்கட்சி நாடாளுமன்றம்’ என்ற தலைப்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அதன் தலைமைக்காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.