சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்!

SELVAM 1
SELVAM 1

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர், அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.