கொழும்பில் விரைவில் மின்சார பஸ் அறிமுகம்!

201708230506082288 Electric bus test run in Chennai SECVPF
201708230506082288 Electric bus test run in Chennai SECVPF

கொழும்பு வீதிகளில் மின்சாரத்தால் இயக்கப்படும் பஸ் வண்டி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில், முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் மேலும் வாகன இறக்குமதி மீதான தடை  நீக்கப்படும் போதெல்லாம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சுற்றுசூழலுக்கு உகந்த மின் சக்தியின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையின் முக்கிய ஆறுகள் மற்றும் நீர் ஓட்டத்தில் மிதக்கும் சூரிய சக்தி அமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படும்  எனவும் நிலக்கரி மற்றும் அனல் மின்சார பயன்பாடு விரைவில் நிறுத்தப்பட்டும்  என அவர் கூறினார். 

இதனையடுத்து வரவு செலவு திட்டம் மீதான குழுவிவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்  பவித்ரா வன்னியாராச்சி  கூறுகையில்,

 2022 ஆம் ஆண்டளவில் பயணிகளுக்கு திறமையான மற்றும் வசதியான பொது போக்குவரத்து  சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இது குறித்து முதற்கட்டமாக அமைச்சின் கீழ் “சஹசர ” திட்டத்தின் மூலம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் 2000 தனியார் பஸ்களுக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மக்கள் வசதியை பெறுவதற்கு தொலைபேசி செயலி ஒன்று இலவசமாக வழங்கப்படும்.  இச் செயலியின் மூலம் மக்கள் தங்கள் அன்றாட பயணங்களுக்கு அழைத்து செல்லும் பஸ் வரும் நேரம் மற்றும்  அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களை பெற முடியும் என்றார்.