அனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பான செயன்முறை பயிற்சிப்பட்டறை !

anarththam 8
anarththam 8

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த காலங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கும் முகமாக சர்வோதயா நிறுவனத்தினால் யு எஸ் எயிட்   நிறுவனத்தின் நிதி ஏற்பாட்டில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில் இரு வருட காலப்பகுதியை கொண்ட அனர்த்த அபாய தணிப்பு பயிற்சிப் பட்டறையின் தொடர்ச்சியாக 07-12-2021 அன்று மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முதல் நாட்ப் பயிற்சிப்பட்டறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

anarththam 1


முதல் நாளில் அனர்த்த காலங்களில் கிராம மட்டங்களில் பணிபுரிகின்ற வகையில் கிராம மட்ட அமைப்புக்களின்; அங்கத்தவர்களுக்கு அனர்த்த காலங்களில் இடைத்தங்கல் முகாம்களில் முகாமைத்துவம் சார் வழிப்படுத்தல் விடயங்கள் கோட்பாடு ரீதியாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

anarththam 5


இன்று முதல்நாள் விடயங்களை அனர்த்த களத்தில் பயன்படுத்துகின்ற வகையில் பிரயோக ரீதியிலான செயன்முறை ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.


இதன் வளவாளராக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் இ.லிங்கேஸ்வரகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.