பொடி லெசியை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி!

sppooooo 1
sppooooo 1

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுஷங்கவை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக அவரது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசகர்கள் ஆயம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (09) எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொடி லெசியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஹர்ஷிக சமரநாயக்க, கடந்த 3ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் திணைக்களத்துக்கு தனது சேவைபெருநரை சந்திப்பதற்காகச் சென்றிருந்த போதிலும், காவல்துறை அத்தியட்சகர் மெரில் லமாஹேவா சந்தர்ப்பம் வழங்கவில்லையென நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மனு எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.