தகராறின் போது தள்ளிவிட்டதில் ஒருவர் பலி

1641960293 1641957521 Muder L
1641960293 1641957521 Muder L

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிவிதிகல – கிரிமடுவ கோட்டத்தின் கீழ் பகுதியில் நேற்று (11) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒருவரைத் தள்ளும் போது தவறி விழுந்ததன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கீழ் நிவித்திகல, கிரிமடுவ லைம பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிவித்திகல காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.