கொழும்பில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் காயம்

1594700738depositphotos 13240275 stock photo build hospital
1594700738depositphotos 13240275 stock photo build hospital

கொழும்பு – கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலத்துறை பகுதியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (16) காலை 10.30 அளவில் குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளதுடன், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கொத்தனார் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கிய இருவரும் மீட்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்