பசிலுக்கு எதிரான மல்வானை காணி வழக்கு விசாரணை தொடர்பில் நாளை தீர்மானம்!

pasil
pasil

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக அரச நிதி முறைக்கேடு தொடர்பில்  சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்கு விசாரணைகளை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றம் நாளை (13) தீர்மானத்தை அளிக்கவுள்ளது.

தொம்பே – மல்வானை – மாபிடிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை, பிரமாண்டமான வீடு மற்றும் நீச்சல் தடாகம் ஒன்றை நிர்மாணித்தமை, பண்ணை ஒன்றை நடத்தியமை மற்றும் அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 25ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும், தமது வாக்குமூலத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரச தரப்பினால் அழைக்கப்பட்ட முதலாவது சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேற்படி இருவருக்கு எதிராக சாட்சிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என பிரதி மன்றாடியார் நாயகம் ஷனில் குலரத்ன அதன்போது மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.