அரசியலமைப்பு சீர்திருத்தம் : பொதுத் தேர்தலுக்குப் பிறகு இறுதி முடிவு

johnston fernando
johnston fernando

பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனவரி 3 ம் நாள் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவாறு குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து இறுதி முடிவுகளை எடுக்க அரசு எதிர்பார்த்துள்ளது.

ஒரு நிலையான அரசாங்கமும் தெளிவான அரசியலமைப்பும் இருப்பது ஒரு நாட்டிற்கு முக்கியமாகும்.

நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை, ஆனாலும் நாங்கள் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்கிறோம்.

அவர்கள் சர்வதேச சமூகத்தின் விருப்பங்களின்படி அரசியலமைப்பை திருத்தியிருந்தனர் இது வளர்ச்சியில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

19வது திருத்தத்தின் காரணமாக அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி உதவி வழங்குவதற்கான வரவு செலவுத்திட்டத்தினை முன்வைக்க முடியாதுள்ளது. எனவே இதற்காக மார்ச் 3 வரை காத்திருக்க வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.