ஜனாதிபதி – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் சந்திப்பு

DSC4687
DSC4687

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கைகள் பற்றி ஜனாதிபதி விளக்கிக் கூறியதாக அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து மேலும் அறிந்துகொள்வதில் தூதுக்குழுவினர் ஆர்வமாக இருந்தனர். அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், தொழிற்திறன் மற்றும் தகுதிக்கு வெகுமதி அளிப்பதற்குமான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு குறித்து தூதுக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இது தவிர, அரசியல் யாப்பின் மீதான 13ஆம் திருத்தம், சுவாத்திய மாற்றம், முதலான விடயங்கள் பற்றியும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நம்பகமான மற்றும் நீண்ட கால பங்காளர் என்ற வகையில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

எனவே, ஐரோப்பிய ஒன்றிய பங்காளர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் நேர்மையானதும் வினைத்திறனானதுமான நிருவாகம் முக்கிய அங்கமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.