தமிழில் தேசிய கீதம் – இனங்களை ஒன்றிணைக்கும்

angajan
angajan

தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அடையாளம் எனவும் வெவ்வேறு இனங்களை ஒன்றிணைப்பதாக அமையும் எனவும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும நாடாளமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து அரச நிருவாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

“தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு கிடையாது.

தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அடையாளம் என்பதுடன் வெவ்வேறு இனங்களை ஒன்றிணைக்கின்றதாக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.