பண்டாரநாயக்கவின் ஜனன தின அனுட்டிப்பு!

swrd
swrd

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஜனன தின நிகழ்வு இன்று (8) அனுட்டிக்கப்பட்டது.

காலி முகத்திடலில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனுட்டிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.