மைத்திரியின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் நாடவுள்ள ஐ.தே.க

sirisena vs ranil
sirisena vs ranil

ஊடகத்துறை அமைச்சின் கீழ் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஆணையை ஜனாதிபதி கடந்த 10ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

இது குறித்து ஊடகத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இலங்கையில் யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பாக தன்னுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

மேலும் ஜனாதிபதியின் குறித்த செயற்பாட்டுக்கு பொது அமைப்புகளும் ஊடக சுதந்திர அமைப்புகளும் தொடர்ந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற நிலையில்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தை நாடி குறித்த உத்தரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.