ஐ.தே.க உறுப்பினர் இருவரின் பதவிகள் பறிப்பு!

RANIL 2
RANIL 2

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வரும் அஜித் பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியமை மற்றும் தலைமைத்துவத்தை இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒழுக்காற்று குழு இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது.

ஒழுக்காற்று விசாரணகைளிற்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் இருவரும் இரண்டு தடவைகள் முன்னிலையாகத் தவறியுள்ளதுடன் இந்த ஒழுக்காற்று குழுவினை சவால் விடுக்கும் வகையில் எழுத்து மூல விளக்கங்கள் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சஜித் பிரேமதாச மாற்றுக் கட்சியில் இணைந்து போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுற்றுத்லாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது,