ரஞ்சனின் குரல் பதிவு – ஐ.தே.க வீழ்ச்சி உறுதி

aluth
aluth

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களின் ஊடாக அதன் வீழ்ச்சி உறுதி என இராஜாங்க அமைச்சரும், அமைச்சரவை இணை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ள எல்.எம்.பாரிஸின் தேர்தல் செயற்பாட்டு காரியாலயத்தை திறந்து வைத்து பேசுகையில்,

“ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அடங்கிய இருவட்டில் ஒரு இலட்சத்து இருபத்தொராயிரம் குரல் பதிவுகள் உள்ளன.

இவற்றின் பின்னணியில் ரணில் விக்ரமசிங்கவே உள்ளார்.

அதேபோல் சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க, அஜித் பி பெரேரா, ஆகியோரும் இதற்கு பின்னாள் இருப்பதுடன் நீதிபதிகளும். பொலிஸாரும் திரைமறைவில் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரஞ்சன் ராமநாயக்கவின் ஊடாக இவை அனைத்தையும் செய்துள்ளனர்.

இந்த கீழ்தரமான செயற்பாட்டினால் மக்கள் மத்தியில் இன்று நீதித்துறை குறித்து பாரிய கேள்வி எழுந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் சிறப்பான காரியங்கள் இடம்பெறும். ஒரு இலட்சத்து இருபத்தொராயிரம் குரல் பதிவுகளில் ஆறு மாத்திரமே வெளிவந்துள்ளன.

இதனூடாக ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக சீர்குழையும்” என தெரிவித்தார்.