ரஞ்சனின் கைதில் அரசியல் பழிவாங்கல் இல்லை – மத்திய மாகாண ஆளுநர்

u.gamage
u.gamage

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் கைது தொடர்பில் எதுவித அரசியல் பழிவாங்கலும் இல்லை என மத்திய மகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.

தலாவாக்கலை – லிந்துல, அக்கரபத்தன மற்றும் கொத்மலை ஆகிய இடங்களின் உள்ளுராட்சி மன்றங்களில் நிலவுகின்ற குறைப்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலில் நேற்றைய நாள் (11) இதனை தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு அரசியல் பழிவாங்கள் செயற்பாடும் இல்லை. இந்த அரசாங்கம் ஒருபோதும் அவ்வாறு செய்வதில்லை.

ஆனால் இதனை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகயாக தெரிவித்து வருகின்றமை தவறானதாகும். இந்த விடயம் பொலிஸாருக்கு பாரப்படுத்தப்பட்டு அவர்கள் உரிய முறையில் நீதியை நடைமுறைபடுத்துவார்கள்.

இந்த விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் உள்ளது. அவற்றின் ஊடாக நீதி நிலைநாட்டப்படும்.

எனவே தனிப்பட்ட முறையில் கருத்துக்களை தெரிவிக்காது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு இது குறித்த பொறுப்புகளை வழங்குவதே பொறுத்தமானதாகும்” என தெரிவித்தார்.