தமிழ் இளைஞர்களைக் கடத்தியதாக கூறப்படும் கடற்படை அதிகாரிக்கு பதவி உயர்வு!

6 xx
6 xx

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க ரியல் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

2008 -2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அத்துடன், அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேல்நீதிமன்றால் ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று பேரின் சரீரப் பிணை உத்தரவாதத்தின் கீழும் பிணையில் செல்ல அனுமதிப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க ரியல் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.