மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மொகமட் அப்துல்லாஹ் நியமனம்

mohammad
mohammad

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக அல்ஹாபில் என்.எம்.மொகமட் அப்துல்லாஹ் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்தீன் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அல்ஹாபில் என்.எம்.மொகமட் அப்துல்லாஹ் அவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.