இந்தியாவோடு இணையப்போகும் இலங்கையின் வடக்கும் கிழக்கும்!

1 sw
1 sw

க்ரைமியாவை ரஷ்யா இணைந்து கொண்டதை போல இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை இந்தியா இணைத்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என வட மாகாண முன்னாள் உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்தியாவுக்கு இடையில் இருக்கும்அரசியல் நெருக்கடி , மற்றும் தமிழர் அரசியல் பிரச்சனை .
தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போராடிய புலிகள் இயக்கம் இந்தியாமீது கொண்ட நம்பிக்கை இவைகளுக்கும் அப்பால் தற்போது சிவாஜிலிங்கம் இந்த வகையான கருத்தை பகிர்ந்திருப்பது வியப்பளித்துள்ளது. அத்துடன் அவர் எந்த வகையில் இந்த கருத்தை தேர்வு செய்தார் என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்படுகிறது .