யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவை அடுத்த மாதம் ஆரம்பம்

20
20

எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி தொடக்கம் பெஸ்ட் எயர் விமான சேவை யாழ்ப்பாணம் விமான நிலையம்- இரத்மலானை விமான நிலையத்திற்கும் இடையில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

கொழும்பிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்திற்கு காலை 8.20 மணிக்கு வந்தடைகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் விமானம் கொழும்புக்கு காலை 10.20 மணிக்கு சென்றடையும்.

ஒரு வழி பயணச்சீட்டு கட்டணமாக 7500 ரூபா அறிவிடப்படவுள்ளதுடன் .அனுமதிக்கப்படும் பொதிகளின் அளவு கட்டணமின்றி 7 கிலோ கிராம் ஆகவும் 20 கிலோ வரையும் 750 ரூபா செலுத்தி பொதிகளை கொண்டு செல்லலாம் என்பதோடு மேலதிகமாக எடுத்து செல்லப்படும் ஒரு கிலோ கிராமுக்கு ரூபா 100 வீதம் அறிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .