காணாமல் போன 2 பில்லியன் எங்கே? எதிர்க்கட்சித் தலைவர் விளக்கம்

6 2
6 2

கொழும்பு தாமரை கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

2012 ஆம் ஆண்டு இதன் அடித்தளம் அமைப்பற்காக 2 பில்லியன் ரூபாய், அலிப் (Alif) என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் சிறுது காலத்தில் காணாமல் போய்விட்டது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயும் எங்கு சென்றது என்று தெரியவில்லை. சீனாவில் அத்தகைய நிறுவனம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மைத்திரியின் அந்த உரைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ விளக்கமளிக்கும் வகையில்

அலிப் நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த ஒரு நிறுவனத்திற்கோ எவ்வித பணமும் வழங்கப்படவில்லை எனவும் 2 பில்லியன் ரூபாய் பணம் சீன தேசிய இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.