ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவு

1 we 1
1 we 1

கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளன. கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து இருப்பார்.

அவர் தலைமையில் கட்சியைக் கொண்டு நடத்துவதே எமது தீர்மானம்.

இந்தநிலையில், ஐ.தே.கவுக்குள் இருந்துகொண்டும் வெளியில் இருந்துகொண்டும் கட்சியைத் துண்டாட யாரும் நினைத்தார்கள் என்றால் அவர்கள் முகவரியற்றுப்போவார்கள் என்பது உறுதி.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியைத் துண்டாட வெளியில் இருப்பவர்கள் சதித்திட்டங்களை வகுத்து வருகின்றார்கள்.

இந்தத் சதித்திட்டங்களுக்கு கட்சிக்குள் இருப்பவர்களும் துணைபோகின்றார்கள். ‘தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையின் பெயரில் வகுக்கப்பட்ட சதி நடவடிக்கை எம்மால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருப்பவர்கள் அனைவரும் எந்தச் சதி நடவடிக்கைகளுக்கும் துணைபோகாமல் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாகும்” – என்றார்.