மெல்பர்ன் அணி அபார வெற்றி!

284310.4
284310.4

பிக் பேஷ் ரி-20 தொடரின் 56ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மெட் ரென்ஷோவ் 65 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஸ்சேன் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியின் பந்துவீச்சில், வில் சுத்தர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும், சமீட் பட்டேல், கேமரூன் போய்ஸ், மொஹமட் நபி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 155 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 63 ஓட்டங்களையும், மொஹமட் நபி ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், பென் கட்டிங் 2 விக்கெட்டுகளையும், முஜிப் உர் ரஹ்மான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஆரோன் பின்ஞ் தெரிவுசெய்யப்பட்டார்.