ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது

5womenarres1 1
5womenarres1 1

வெல்லம்பிடிய-வென்னவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவரை இன்று(29) போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 387 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய குறித்த பெண்ணை புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

.