கரீபியன் தீவுகளில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

625.500.560.350.160.300.053.800.900.160.90 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 1

கரீபியத் தீவுகளை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கு சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜமைக்கா, கேமன் தீவுகள், கியூபா ஆகியவற்றுக்கு இடையே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வகம் தெரிவித்தது.

மயாமி வரை அதிர்வுகள் உணரப்பட்டபோதும் எந்தவித சேதமும் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி நிலையம் எச்சரிக்கை விடுத்தது.

நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதியிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரம் வரை மிகப்பெரிய அலைகள் எழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதிகளிலிருந்து வெளியேறும்படி கேமன் தீவுகளின் அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.