நிர்பயா வழக்கில் புதிய தடை

202001291037425683 Third Convict In Nirbhaya Case Files Curative Petition In SECVPF
202001291037425683 Third Convict In Nirbhaya Case Files Curative Petition In SECVPF

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளிகளில் ஒருவர், தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

4 குற்றவாளிகளுக்கும் பெப்ரவரி 1-ம் திகதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர், இன்று(29) தீர்ப்பு வழங்க உள்ளனர்.