ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

england vs rsa
england vs rsa

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்ஆப்பிரிக்காவை 3-1 என வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒன்பது முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த 27 தொடர்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-1 என கைப்பற்றிய இங்கிலாந்து 146 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 296 புள்ளிகளுடன் அவுஸ்ரேலிய அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இலங்கை அணி 80 புள்ளிகளுடன் 5ம் இடத்திலுள்ளது.