ஜனாதிபதியிடம் சாட்சி பதிவு – விசேட தெரிவு குழு ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம்!

9
9

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழு அங்கத்தவர்களும் தனது சாட்சியங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய தினம் காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி செயலகம் ஊடாக சில முக்கியமான தகவல்கள் மாத்திரம் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி சாட்சியாளரான ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதன் பின்னர் தெரிவுக்குழு விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து தாக்குதல்கள் குறித்து ஆராய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் இதுவரையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சாட்சியங்களைப் பெறவுள்ளதாக தெரிவுக்குழு தெரிவித்திருந்தது.