யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை புறக்கணிக்க என்ன காரணம் – மாவை கருத்து

1 der
1 der

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தமைக்கான காரணத்தை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ .சேனாதிராஜா நமது தமிழ்க்குரல் ஊடகத்துக்கு தெளிவுபடுத்தினார் .

இன்று காலை இந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை புறக்கணிக்கின்றமைக்கான காரணத்தை தமிழ்க்குரல் ஊடகம் வினவியது .

ஜனாதிபதியால் வழங்கப்ப ட்ட நியமனம் குறித்த விடயத்தில் எமக்கு திருப்தி இல்லை. மீள்குடியேற்றம் ,வீதி அபிவிருத்தி போன்ற விடயங்களில் பிரேரித்த செயற்பாடுகளில் அதிருப்தி உள்ளது .

இதுதொடர்பான அறிக்கை ஒன்றை நாம் ஒருங்கிணைப்பு குழுவுக்கு அனுப்பியுள்ளோம் அதில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளோம் .

எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம் .


இதனைவிட பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுடன் கட்சியின் பேச்சாளர் எம் .ஏ ,சுமந்திரனுடன் இணைந்து நானும் இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசியுள்ளோம் .

பிரேரித்த விடயங்களின் ,இழுபறிகள் மற்றும் நடைமுறை சிக்கல்களால் கூடத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துள்ளோம் . ஆனால் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்த கொள்வார்கள் எனக் குறிப்பிட்டார் .