கரைச்சி பிரதேச சபை வரி பிரச்சனை 90 நாட்களில் முடிவுக்கு வரும் !

66 1
66 1

கரைச்சி பிரதேச சபையினரால் மக்களிடம் அறவிடப்படும் வரி அறவீடு வீதம் தொடர்பில் அண்மையில் வர்த்தகர் ஒருவரால் உண்ணாநிலை போராட்டம்வரை சென்று பிரச்சனை பூதாகரமாக மாறியது.

இதனைத்தொடர்ந்து கூட்டப்பட்ட விசேட அமர்விலும் அடிதடி பிரச்சனைகள் இடம்பெற்றன .

இந்த வரி பிரச்சனைக்கு இறுதியான முடிவு என்ன என தமிழ்க்குரல் ஊடகம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனை தொடர்புகொண்டு பேசியது .

பதிலளித்த தவிசாளர் – மக்கள் மற்றும் வரியிறுப்பாளர்கள் , பிரதிநிதிகளுடன் பேசி 90 நாட்களில் இதற்கான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளோம் ,அதில் 51% மக்களின் ஆதரவு பெற்று வரியிறுப்பு வீதம் தீர்மானிக்கப்படவுள்ளது .

23 கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்தும் பெறப்படும் மக்களின் கருத்து முடிவுகளை கொண்டு அடுத்த வருடத்துக்கான வரி அறவீட்டில் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார் .